குமுறல்

பிறந்த உனைதிறந்த மேனியாய் விடாசிறந்த துணியால் பொதித்தோம்வளரும் பருவத்தில்எமக்கு பிடித்ததெல்லாம்உடுத்தி பார்த்தோம்நிமிர்ந்த நடையும்நேர் கொண்ட பார்வையும்அஞ்சா மடமும் பயிற்றுவித்தோம்வளர்ந்த பின்னேமறைக்க வேண்டியதை மூடவில்லைஅறிவுரைகளை கேட்கவில்லைபாராட்டும் பத்திரமும்புகழும் பெயரும்பொருளோடு சேர்த்துக் கொண்டாய்அழகிப் போட்டியில் அலங்கரித்தாய்விளம்பரங்களில் வெளிக்காட்டினாய்வெட்கத்தை வாடகைக்கு விட்டாய்எனக்கு பெருமையும் இல்லைஉன் மீது வெறுப்பும் இல்லைஉன்னை பெற்றவளாய் மகிழ்ச்சியும் இல்லைமன குமுறல்கள் பல இருந்தாலும்உன் மகிழ்ச்சிக்காகஎன் வாய் வளைந்தது புன்னகையாக

By | 2006-04-12T12:36:00+00:00 April 12th, 2006|கவிதை|0 Comments

வேலை பளு

வயிற்றில் கருச்சுமை சுமந்துமனதில் பாரத்துடன்அரை வயிற்றுடன்கண்களில் மகிழ்ச்சியுடன்தலையில் கற்களை சுமக்கும்சித்தாளை கண்ட போதுவெட்கப்பட்டேன் எனக்குள்,அலுவலகத்தில் வேலை பளு எனக்குஎன்று சொல்லிக் கொள்ள.மார்ச் 2005 'திசைகள்' மகளிர் சிறப்பு இதழில் வெளிவந்த கிறுக்கல்

By | 2006-04-10T09:43:00+00:00 April 10th, 2006|கவிதை|3 Comments

சுனாமி அழிவு

கடலோரம் கடக்கும் போதுகிடைத்த சங்கை காதில் வைத்தால்ஓ என்று எழும் சத்தம்ஓராயிரம் குடும்பத்தின் மரண ஓலம்என்று அறியாது இருந்து விட்டோம்.வான நிறத்தை எடுத்துக் கொண்டுநீலமாக தெரிகிறாய் என்று எண்ணி இருந்தோம்கொடிய எண்ணத்தை கொண்டதனால்அது உனக்கு கிடைத்த நிறம்என்று அறியாது இருந்து விட்டோம்உன்னிடம் உள்ள கடலினங்களைநாங்கள் கொன்று தின்றோமென்றால்உன் பாரம் குறையும் என்று நினைத்திருந்தோம்அது பொறுக்க முடியாமல் பொங்கி எழுவாய்என்று அறியாது இருந்து விட்டோம்உணர்வுகள் நாங்கள் அறியஉப்பை தந்தாயென நாங்கள் உள்ளம் மகிழ்ந்தோம்நீ விழுங்கிய சந்ததியின் கண்ணீரினால்தான்நீ உப்பாக [...]

By | 2006-04-09T07:01:00+00:00 April 9th, 2006|கவிதை|2 Comments

சுதந்திரப் பறவை

என்ன பார்க்கிறாய்என்னை பார்க்கும் போதுஎன்னில் என்ன பார்க்கிறாய்?நான் சுதந்திர பறவையா?கட்டுக்கோப்புகுள் அடங்கியவளா?இயந்திர உலகில் மாட்டியவளா?கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்கண்ணடியாக என் மேனி தெரியாததாலோ?கறுப்பு முடிகள் மறைந்திருப்பதாலோ?நாகரீகம் அறியாதவளாகபிணைக்கப்பட்ட கைதியாகநான் தெரிகிறேனோ உனக்கு?எனகென்று சொந்த குரல்எனகென்று சுயசிந்தனை இல்லை என்கின்றாய்வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்மூடி மறைப்பது - கூண்டு கிளியா?முடியை மறைப்பது - அநாகரீகமா?காட்ட மறுப்பது - திணிப்பா?சிறு வட்டத்தில் அடைப்பட்டவளாகபரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்‘சுதந்திரத்தின்’ பொருள் அறியாமலேயேகவலை, துயரம்கோபமும், வேதனனயும் எனக்குகண்களின் ஓரம் கண்ணீரும் இருக்குகண்ணீரின் காரணம்நீ என்னை ஒதுக்குவதாலும்உன் [...]

By | 2006-04-08T10:57:00+00:00 April 8th, 2006|கவிதை|9 Comments

விபத்து

முருங்க இலை பறிக்க மரமேறிமுழங்கால் சிராய்த்தும் அழாமல்ஒட்டிய மண்ணைத் தட்டி விட்டவனைபதறியடித்து தடவிக் கொடுத்தபல்லில்லா பாட்டி நினைவில் நிற்கவில்லைகோலி உருட்டி விளையாடிஎறும்பினால் கடிப்பட்டதால் அதை மிதிக்கபாவம் என்று பரிதாபப்பட்டுவிஷக்கடியாய் பாவித்து வலிபோக்கியவழிப்போக்கன் மனதில் நிலைக்கவில்லைகாய்ச்சலில் சுருண்டதும்கோவில் வேண்டுதல்களும்பக்கத்து வீட்டு ·பாத்திமா அக்கா·பாத்திஹ ஓதி தந்த தண்ணீரும்பெரிய விஷயமாகப்பட வில்லைபழுத்த முகத்தோடுபார்ப்பார் முகம் சுளிக்கும் அம்மையேறிமுகம் தெரியாத நபர்களெல்லாம்விசாரித்து பக்குவம் சொல்லியதுஎப்போதும் என் நெஞ்சை தொட்டதில்லைபெருநகர நெரிசலில்இருசக்கர வண்டி ஓட்டிச் சென்றவனைபல்லவன் தட்டிச் செல்லஓரமாகக் குருதி வலிய உயிர் [...]

By | 2006-04-02T10:52:00+00:00 April 2nd, 2006|கவிதை|0 Comments