About Jazeela Banu

This author has not yet filled in any details.
So far Jazeela Banu has created 164 blog entries.

சுதந்திரப் பறவை

என்ன பார்க்கிறாய்என்னை பார்க்கும் போதுஎன்னில் என்ன பார்க்கிறாய்?நான் சுதந்திர பறவையா?கட்டுக்கோப்புகுள் அடங்கியவளா?இயந்திர உலகில் மாட்டியவளா?கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்கண்ணடியாக என் மேனி தெரியாததாலோ?கறுப்பு முடிகள் மறைந்திருப்பதாலோ?நாகரீகம் அறியாதவளாகபிணைக்கப்பட்ட கைதியாகநான் தெரிகிறேனோ உனக்கு?எனகென்று சொந்த குரல்எனகென்று சுயசிந்தனை இல்லை என்கின்றாய்வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்மூடி மறைப்பது - கூண்டு கிளியா?முடியை மறைப்பது - அநாகரீகமா?காட்ட மறுப்பது - திணிப்பா?சிறு வட்டத்தில் அடைப்பட்டவளாகபரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்‘சுதந்திரத்தின்’ பொருள் அறியாமலேயேகவலை, துயரம்கோபமும், வேதனனயும் எனக்குகண்களின் ஓரம் கண்ணீரும் இருக்குகண்ணீரின் காரணம்நீ என்னை ஒதுக்குவதாலும்உன் [...]

By | 2006-04-08T10:57:00+00:00 April 8th, 2006|கவிதை|9 Comments

விபத்து

முருங்க இலை பறிக்க மரமேறிமுழங்கால் சிராய்த்தும் அழாமல்ஒட்டிய மண்ணைத் தட்டி விட்டவனைபதறியடித்து தடவிக் கொடுத்தபல்லில்லா பாட்டி நினைவில் நிற்கவில்லைகோலி உருட்டி விளையாடிஎறும்பினால் கடிப்பட்டதால் அதை மிதிக்கபாவம் என்று பரிதாபப்பட்டுவிஷக்கடியாய் பாவித்து வலிபோக்கியவழிப்போக்கன் மனதில் நிலைக்கவில்லைகாய்ச்சலில் சுருண்டதும்கோவில் வேண்டுதல்களும்பக்கத்து வீட்டு ·பாத்திமா அக்கா·பாத்திஹ ஓதி தந்த தண்ணீரும்பெரிய விஷயமாகப்பட வில்லைபழுத்த முகத்தோடுபார்ப்பார் முகம் சுளிக்கும் அம்மையேறிமுகம் தெரியாத நபர்களெல்லாம்விசாரித்து பக்குவம் சொல்லியதுஎப்போதும் என் நெஞ்சை தொட்டதில்லைபெருநகர நெரிசலில்இருசக்கர வண்டி ஓட்டிச் சென்றவனைபல்லவன் தட்டிச் செல்லஓரமாகக் குருதி வலிய உயிர் [...]

By | 2006-04-02T10:52:00+00:00 April 2nd, 2006|கவிதை|0 Comments

யார் காரணம்!?

கனவோடு மனமேடையேறிஇன்பமாய் இல்லறம் தொடங்கிவிரைவிலே உற்றவன் இறக்கநாட்பது கழிந்து வேலை தேடிசேரவும் செய்தேன்நானா காரணம்?இருள் சூழ்ந்த வாழ்க்கையில்விளக்காய் கிடைத்த வேலையைதெய்வமாக போற்றிகண்டவர் பார்வையை கடந்துசீண்டுவான் கிண்டல் தாங்கினேன்.துணிவா காரணம்?ஒரு வாரத்திலே தெரிந்ததுபுதிய துணை உண்டானது என்றுஇழந்த துயரை மறந்துகவசமான உயிரைகவனமாய் பாவித்தேன்.நம்பிக்கையா காரணம்?எதிர்ப்புகளே மிகுந்ததுஉணர்வுக்கு புரிதல் இல்லைஅழிக்க வற்புறுத்தல்தாங்ககூடிய சுமை என்றேன்கேட்பாரில்லை.காரணம் தந்தார்கள்சமுதாய சந்தேகம் என்று!

By | 2006-03-28T10:53:00+00:00 March 28th, 2006|கவிதை|0 Comments

தமிழ் இனி…

ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனபின்னுமஅம்மா என்பதை பசுக்கள் மறவாது!காற்று நுழையாத குகையிலும்குடைந்து செல்லும் ஆற்றல் மிக்கவள் நீ!புயலுக்கு மடிந்து சரியும்வாழைத்தரு அல்லநூற்றாண்டுகள் பல கடந்து நிற்கும்ஆலமரம் நீ!வெள்ளையர்கள் வந்தாலும்மொகலாயர்கள் மேய்ந்தாலும்ஆரியர்கள் ஆண்டாலும்செழித்த சாம்ராஜியம் பெற்றவள் நீ!சிப்பியாக எளிதாகக் கிடைத்தாலும்உன்னை ஆழ்கடல் நடுவே எடுத்தமுத்தாகவே கோர்த்து வைப்பேன்.பொக்கிஷப்படுத்த வேண்டியவள் அல்லவோ நீ!சிலப்பதிகாரத்தால் சிலிர்க்க வைத்தாய்திருக்குறளைச் சுவைக்க வைத்தாய்ஐந்திணையை வியக்க வைத்தாய்உன் புகழை அளந்தால்அந்த இமயம் கூட குட்டையே!உன்னைக் கொண்டுவெள்ளை நிலவை தங்கமாக்கலாம்வெள்ளரியையும் விரலாக்கலாம்கருங்குரங்கையும் அழகுப்படுத்தலாம்!இயலாக இயங்கிக் கொண்டிருப்பவளேஇசையாக ஸ்வரத்தில் மட்டுமின்றிநாவிற்கும் [...]

By | 2005-05-10T11:27:00+00:00 May 10th, 2005|கவிதை|10 Comments