நினைவுகளில் நீ


நீ இல்லாத வெறுமையை

நூலாக்கி

கோர்த்துக் கொண்டேன்

என்னுள்

தைக்க முடிகிறது

நம் நினைவுகளாலான

வண்ணம் மிகுந்த

கனவுகளை

By | 2010-05-27T08:03:00+00:00 May 27th, 2010|கவிதை|20 Comments

20 Comments

 1. LK May 27, 2010 at 8:47 am - Reply

  அழகான வரிகள். வாழ்த்துக்கள்

 2. மின்மினி May 27, 2010 at 10:20 am - Reply

  அருமையான கவிதை. பிரிவின்வலி சுகமானதே..

 3. கோமதி அரசு May 27, 2010 at 11:56 am - Reply

  அருமையான கவிதை.

  நினைவுகள் அழிவதில்லை.

 4. நேசமித்ரன் May 27, 2010 at 11:56 am - Reply

  நல்லா இருக்குங்க !

 5. ஜெய்லானி May 27, 2010 at 7:13 pm - Reply

  நல்ல கவிதை…!!!

 6. ஜெஸிலா May 27, 2010 at 7:19 pm - Reply

  நன்றி எல்.கே.

  மின்மினி உங்க வலைப்பகுதிக்கு வந்திருக்கிறேன். உங்கள் எழுத்துக்கள் எனக்கு கண்மணியை நினைவுப்படுத்தியது.

  நன்றி நேசிமித்ரன் உங்கள் நேசம் மிகுந்த வாழ்த்துக்கு.

  வாங்க கோமதி நலமா? வலையில் நிறைய பெண்கள் வலம் வருவது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.

  நன்றி ஜெய்லானி. இந்த பெயர் ஆணுக்கும் வைக்கிறார்கள் பெண்ணுக்கும் வைக்கிறார்கள் – நீங்கள்?

 7. அழகிய சிறு கவிதை ஒற்றை மல்லிகையைப் போல. என்றாலும்…சோகம் மட்டுமே உங்கள் பாடலின் உள்ளடக்கமாக இருக்கிறதே. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…. போல உற்சாகமூட்டும் கவிதைகளையும் தாருங்கள் சகோதரி!சூடா ஒரு மசால் தோசை என்பது போல கேட்டு வருவதல்ல கவிதை என்றாலும் இது ஒரு நேயர் விருப்பம் மட்டுமே!

 8. Twinsaru August 2, 2010 at 1:08 pm - Reply

  நண்பி,
  உன் கிருக்கல்கள் எல்லாம் அருமையானது,

  நிஜத்தில் அனுபவித்தவர்களால் மட்டும் தான் இப்படி கிருக்க முடியும்..
  வாழட்டும் உன் கவிதைகள்…..

  அபுதாபி – 050 6894 050

 9. கிறுக்கல்களில் தொய்வு ஏன்?

 10. ஜெஸிலா August 11, 2010 at 8:16 am - Reply

  தோய்வின் காரணம் நேரமின்மை.

 11. ஜெஸிலா August 11, 2010 at 8:16 am - Reply

  தோய்வின் காரணம் நேரமின்மை.

 12. அருமை வாழ்த்துக்கள்

 13. crown September 13, 2010 at 8:54 am - Reply

  நீ இல்லாத வெறுமையை

  நூலாக்கி

  கோர்த்துக் கொண்டேன்

  என்னுள்

  தைக்க முடிகிறது

  நம் நினைவுகளாலான

  வண்ணம் மிகுந்த

  கனவுகளை – அந்த கனவுகளே உன்னை எனக்கு நினைவுபடுத்டுகிறது நீ என்னுள் இருப்பதை. நல்ல எழுதி இருகிறீர்கள்.

 14. Rathnavel June 20, 2011 at 10:07 am - Reply

  நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

 15. வித்தியாசமான வரிகள் வாழ்த்துக்கள்

 16. அருமையான கவிதை

 17. Trichy Syed December 22, 2011 at 11:52 am - Reply

  கவிதையின் அருகே இருக்கும் அழகிய கண்களைப்போல கவிதையும் அழகு!

 18. rishvan January 22, 2012 at 7:55 am - Reply

  அழகான ஆழமான வரிகள்… நன்றி பகிர்விற்கு… நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்… நன்றி பகிர்விற்கு… நானும் கதை, கவிதை எழுதுகிறேன்…www.rishvan.com

 19. Trichy Syed February 28, 2012 at 1:01 pm - Reply

  கவிதையின் அருகே இருக்கும் அழகிய கண்களைப்போல கவிதையும் அழகு!

Leave A Comment