இஸ்லாம் ஓர் அறிமுகம்

வானங்களையும், பூமியையும், மலைகளையும், இயற்கையையும், மிருகங்களையும், மனிதர்களையும், சர்வ சிருஷ்டிகளையும் படைத்தவன் இறைவன்.

வழிப்பாடுக்குரியவன் வேறில்லை ‘அல்லாஹ்’வை தவிர. ‘அல்லாஹ்’ என்ற அரபு வார்த்தைக்கு இறைவன் என்று பொருள். அதன் முழுமையான பொருள் ‘வழிப்பாடுக்குரிய இறைவன் ஒருவனே’ என்பதாகும்.
அல்லாஹ் என்றால் இறைவன் என்ற பொருள் மட்டுமே தவிர அது இறைவனுடைய பெயராகாது. அதனாலேயே அரபு நாடுகளில் வாழும் பல்வேறு மதத்தினவர்களும் மிகச் சரளமாக ‘இன் ஷா அல்லாஹ்’, ‘ஸுப்ஹானல்லாஹ்’, ‘அல்லாஹ்’ என்று பேச்சு வழக்கிலேயே பயன்படுத்துகிறார்கள்.

நடக்கவிருக்கும் விஷயங்களைப் பற்றிப் பேசும் போது ‘இன் ஷா அல்லாஹ்’ அதாவது ‘இறைவன் நாடினால்’ என்பதைச் சேர்த்தே பேசுகிறார்கள். காரணம், அடுத்த நிமிடம் நமக்கானதில்லை, என்ன நடக்குமென்று தெரியாத நாம் எல்லாக் காரியங்களிலும் இறைவனை நினைத்து கொள்ளுதல் வேண்டும் என்பதாக.

அழகான அல்லது பிரமிப்பானா ஏதாவது ஒரு விஷயத்தைக் கண்டால் இறை நம்பிக்கையுடையவன் மொழிவது ‘ஸுப்ஹானல்லாஹ்’ அதன் விளக்கம் இறைவன் பரிசுத்தமானவன், தூயவன் என்பதாக.

இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு மார்கம் வழிகாட்டுதல். இறைவன் இவ்வகையான வழிகாட்டுதலை இவ்வுலகத்தைப் படைத்த நாள் முதல் மனித சமுதாயத்தின் வாழ்வு சீர்பெற அவர்களை நெறிப்படுத்த ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவனுடைய தூதுவனை அனுப்பியிருந்தான். ‘இஸ்லாம்’ என்ற அரபு வார்த்தைக்கு பணிதல், கட்டுப்படுதல், வழிப்படுதல், சமாதானம் என்ற கருத்துக்களை பொதிந்துள்ளது. ஒரு மனிதன் இஸ்லாமிய/ அரபிய பெயர் வைத்திருந்தால், முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்திருந்தால் மட்டுமே முஸ்லிமாகிவிட முடியாது. இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நல்லொழுக்கத்தோடு அவனுடைய கட்டளைகளை ஏற்று பின்பற்றி நடப்பவனே ‘முஸ்லிம்’.

இஸ்லாமின் அடிப்படை கடமைகள் ஐந்து தூண்களால் நிறுவப்பட்டுள்ளது. அதில் முதலாவது வழிபாடிற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்பதும் நபி முஹம்மது (ஸல்)* அவர்கள் மனித சமுதாயங்கள் அனைத்திற்கும் இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித்தூதர் என்றும் சாட்சியம் கூறுதல். இதை அரபியில் ‘ஷஹாதா’ என்பார்கள்.

இரண்டாவது தொழுகையை நிலைநாட்டுவது, மூன்றாவது ஜக்காத் கொடுப்பது அதாவது தர்மம் செய்வது, நான்காவது தூண்தான் ரமதான் மாதத்தில் நோன்பு நோற்பது. காலை சூரியன் உதயத்திலிருந்து மாலை சூரியன் மறையும் வரை உண்ணாமல், ப்ல்காமல், புறம் பேசாமல், கோபம் கொள்ளாமல், உடல் உறவு கொள்ளாமல் இருத்தல். ஐந்தாவது ஹஜ் செய்வது.
இந்த ஐந்து தூண்களில் நம் வாழ்வை நிறுவ இறைவன் நமக்கு அருள்வானாக. ஆமீன்.

———————————————

*ஸல் – ‘ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்’ என்பதன் சுருக்கமாகும். இதன் பொருள் “நபிகள் நாயகத்தின் மீது அல்லாஹ் கருணையும் சாந்தியும் பொழிவானாக” என்பதாகும். எழுத்தில் ஸல் என்று கூறப்பட்டாலும் வாசிக்கும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும். நாயகத்தின் பெயருக்குப் பின் சில இடங்களில் ஸல் என்று குறிப்பிடாமல் இருந்தாலும் அவர்களுக்காக ஸலவாத் கூற வேண்டும், அதாவது அவர்களுக்காக இறையருள் வேண்டி துஆ செய்ய வேண்டும்.

By | 2017-06-12T09:41:24+00:00 April 1st, 2016|0 Comments

Leave A Comment