இறைநம்பிக்கை

இஸ்லாமின் அடிப்படை இறைநம்பிக்கைதான்.

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் நபி (ஸல்) அல்லாஹ்வின் இறைத்தூதர் என்றும் உறுதியாக இருப்பது.

அதுமட்டுமின்றி இறைவனின் கட்டளைகளைச் சரிவரச் செய்தல் அதாவது, தொழுகை, ஸகாத் (தர்மம்) செய்தல், ரமதான் மாதத்தில் நோன்பு இருத்தல், சென்றுவர இயன்றால் மட்டுமே இறையில்லமான கஅபாவிற்குச் சென்று ‘ஹஜ்’ செய்தல் என்பது இஸ்லாமென்றால், ஈமான் என்ற இறைநம்பிக்கையின் அடிப்படையானது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நம்புவதும், நன்மை- தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நம்புவதுமாகும்.

இறைகட்டளையை நிறைவேற்றல், அழகிய முறையில் செயலாற்றல் என்பதை இஹ்சான் என்போம்.

இஹ்சான் என்றால் அல்லாஹ்வை பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், இறைவன் நாம் பார்க்க முடியாவிட்டாலும் அவன் நம்மைப் பார்க்கின்றான் என்ற உணர்வுடன் உளதூய்மையுடன் வழிபடுவது.

இறைவன் நம் வாழ்வில் இஸ்லாத்தை ஈமானுடன் இஹ்சானுடன் பின்பற்ற அருள்வானாக. ஆமீன்!!

By | 2017-03-25T14:22:31+00:00 April 2nd, 2016|0 Comments

Leave A Comment