கடந்து போன காலம்.. The Past – Le Passé

ஆரம்பக் காட்சியைப் புரிந்து கொள்ள கடைசிக் காட்சி வரை நம்மைப் பார்க்க வைக்கும் படம் 'தி பாஸ்ட்' (The Past - Le Passé). தலைப்பை 'தி பாஸ்ட்' என்று வைத்துவிட்டு ஒரு 'பிளாஷ் பேக்' கூட இல்லாமலும், இதுவரை நடந்தது என்ன என்று ஒரு கதை சொல்லி மூலமோ குட்டிக் கதை மூலமோ சொல்ல முற்படாமல் கதையில் வரும் காட்சிகளின் நகர்வை வைத்தும், வசனங்களை வைத்தும் நம்மைப் புரிந்து கொள்ள வைக்கிறார் இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹதி. [...]

By | 2016-12-20T18:18:22+00:00 December 11th, 2013|திரைவிமர்சனம்|1 Comment

அறிந்தும் அறியாமலும்…

மற்றவர்கள் பேச்சை நான் எப்போதும் கவனிப்பதே இல்லை. எனக்குத் தொடர்புடையதாக இருந்தால் அல்லது என்னுடன் பேசினால் மட்டுமே அதில் கவனம் செலுத்துவேன். மிக அருகிலிருந்து பேசினால் கூட அதை காது கொடுத்து கேட்க மாட்டேன். பலர் இதற்காக என்னைக் கடிந்து கொண்டிருக்கிறார்கள். என் மேலாளர் கூட போனில் ஏதாவது பேசிவிட்டு அது தொடர்பாக என்னிடம் ஏதாவது கேட்டால் எனக்குத் தலையும் புரியாது வாலும் புரியாது. ஆரம்பத்தில் மேலாளர் என்னுடன் இதற்காகவே மிகவும் சினம் கொண்டிருக்கிறார். ஆனால் பின்னர் [...]

By | 2013-10-01T10:15:00+00:00 October 1st, 2013|சிறுகதை|5 Comments

எங்கே அவள்?

'Money.. Money... Money' இதையே தாரக மந்திரமாகக் கொண்ட கரனுக்கு எல்லாமும் வேண்டும் ஆனால் பணமும் அதிகம் செலவாகிவிடக் கூடாது. அனிதா, கரனுக்கு அப்படியே எதிர்மறையான சிந்தையுடையவள். நாளையென்பது நிச்சயமில்லாத உலகில் சேமிப்பு, பத்திரப்படுத்துதல், கவனத்துடன் பயன்படுத்துதல் என்ற சொல்லுக்கே இடம் தராது தாராளமாகவும் அலட்சியமாகவும் செலவு செய்பவள். தனது மூன்று வயது மகள் ரோஷிமாவுக்கென்றால் கேட்கவே வேண்டாம் கேட்காமல் சகலமும் தந்திடுவாள் அவளுடைய நேரத்தைத் தவிர. கணவன் - மனைவி இருவரும் வியாபாரம், வெளியூர் பயணமென்று [...]

By | 2013-04-01T11:37:00+00:00 April 1st, 2013|சிறுகதை|3 Comments