எங்கிருந்தோ வந்தான் – The Man from Nowhere

நாளை என்பதை மறந்து இந்த நிமிடத்திற்காக மட்டும் வாழ்பவராக நாமிருந்தால் நம்மைப் பற்றி யோசிப்போமா அல்லது சுற்றி இருப்பவர்கள் சந்தோஷத்திற்காகப் பாடுபடுவோமா? நம் சகோதரர்கள் உலகில் பல இடங்களில் இன்னல்களில் இருந்தாலும் அவர்களுக்காக நம் பங்கு என்னவாக இருந்துவிட முடியும்? பிற நாடு வேண்டாம் அண்டை மாநிலம்,, அதுவும் வேண்டாம் சொந்த ஊர் இல்லை, அடுத்த தெரு ம்ஹும் பக்கத்து வீட்டில் பிரச்சனை அல்லது வன்கொடுமை என்றாலும் கூட தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பவர்கள்தான் நம்மிடையே ஏராளம். [...]

By | 2012-12-04T08:32:00+00:00 December 4th, 2012|திரைவிமர்சனம்|5 Comments

உறவும் பிரிவும் – A Separation

உறவுகள் பலவிதம், நாம் தேர்ந்தெடுக்காமலே பிறப்பினால் ஏற்படும் உறவுகள், நாம் தேர்ந்தெடுப்பதின் மூலம் ஏற்படும் உறவுகள் இப்படி எந்த வகையான உறவாக இருந்தாலும் சரி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், பிளவு என்பது சகஜம். ஆனால் அது கணவன் - மனைவி இடையில் வந்தால் மட்டுமே திருமணமுறிவுகள் - ஏன் இப்படி? விவாகரத்தின் காரணங்கள், ஒருவரால் ஒருவருடன் வாழவே முடியாது, சகித்துக் கொள்ளவே முடியாது என்ற பட்சத்தில் விவாகரத்தை எதிர்பார்ப்பார்கள் அல்லது வேறு ஒருவருடன் வாழ துடிப்பதாலும் விவாகரத்து [...]

By | 2012-11-27T06:14:00+00:00 November 27th, 2012|திரைவிமர்சனம்|2 Comments

அறம் செய விரும்பு – ‘The Blind Side’

பெரும்பாலான படங்களில் நடிகர்கள் நடிப்பார்கள் ஆனால் ஒரு சில படங்களில் மட்டும் தான் அந்த கதாபாத்திரத்திற்கு நடுவே நாம் உட்கார்ந்து கொண்டு அவர்கள் வாழ்வு முறைகளைக் கவனிப்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படியான உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது ‘தி பிளைண்ட் சைட்’. 2009 வெளிவந்த ஒரு அமெரிக்க கால்பந்து விளையாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் மைக்கெல் ஓஹெர் என்பவரின் வாழ்வியல் தான் ’தி பிளைண்ட் சைட்’. உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு கிடைத்த [...]

By | 2012-11-21T11:09:00+00:00 November 21st, 2012|திரைவிமர்சனம்|4 Comments

தனியே..தன்னந்தனியே…

’தனிமையிலே இனிமை காண முடியுமா?’ கே.டீ.சந்தானம் அவர்கள் எழுதிய அழகிய பாடல். இந்தப் பாடலையே நிறைய பேர் தனிமையில்தான் இரசித்திருக்கக் கூடும். இப்போதெல்லாம் அலுவல் காரணமாக எனக்குத் தனிமையில் மதிய உணவு சாப்பிடும் வாய்ப்பு அமைகிறது. எங்கேயாவது வெளியில் வேலை விஷயமாகச் சென்று விட்டு அவசரகதியில் ஒரு 'சாண்ட்விச்' எல்லாமில்லை. என்னதான் அவசரகதியில் இருந்தாலும் சாப்பிடும் நேரத்தை சுவாரஸ்யமானதாக ஆக்கிக் கொள்வது என் வழக்கம். அன்றும் அப்படித்தான். துபாய் மரினா மால் 'ஃபுட்கோர்ட்டில்' அமர்ந்திருந்து என்னைச் சுற்றியிருக்கும் [...]

கனவான நிஜங்கள்

எல்லாமும் கனவாகவேதான் எனக்கு இன்னும் தோன்றிக் கொண்டு இருக்கிறது. சில நேரங்களில் `இது கனவுதான் கனவுதான்` என்று எனக்குள் நானே சத்தமாகச் சொல்லி இன்றும் என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் மனதிற்குத் தெரியும் ஆனால் `பீறிட்டு வரும் அழுகையை அடக்குவது எப்படி?` என்று சிறப்புப் பயிற்சி பெறாதவளாக, அது பற்றி யாராவது புத்தகம் எழுதி இருக்கிறார்களா என்று இன்னும் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் சிலர் ஆறுதல் சொல்ல வந்தால் எப்படி [...]