இப்ராஹிம் (அலை) அவர்களைப் போலவும் தந்தை இசாக் (அலை) அவர்களைப் போலவும் யாகூப் (அலை) அவர்களும் மக்களிடம் “அல்லாஹ் உங்களுக்குத் தூய்மையான மார்க்கத்தை, வழிகாட்டுதலை, இஸ்லாமைத் தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாகவே இருங்கள் முஸ்லிம்களாகவே மரணியுங்கள்” என்று போதித்து வந்தார்.
பின்பு யாகூப் (அலை) அவர்கள் தனது பதினோறு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு மனைவிகள், இரண்டு அடிமைப் பெண்கள், வேலையாட்கள், ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் என்று எல்லாரையும் கூட்டிக் கொண்டு தற்போது ஜெருசேலம் இருக்கும் பகுதிக்கு அருகே தங்கிவிடுகிறார்கள்.
யாகூப் அவர்களின் அன்பு மனைவி ராஹில் இரண்டாவதாக ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் குழந்தையைப் பிரசவிக்கும் போதே ராஹில் இறந்துவிடுகிறார். அந்த இரண்டாவது ஆண் குழந்தைக்குப் புன்யாமீன் என்று பெயரிடுகிறார்கள்.தாயை இழந்த குழந்தைகள் என்பதால் யாகூப் (அலை) மற்ற குழந்தைகளைவிட யூசுப் மற்றும் புன்யாமீன் மீது பாசமாக இருந்தார்கள். லியாவின் மற்ற பத்து மகன்களும் தங்களின் தாய் பெறாத யூசுப் மற்றும் புன்யாமீன் மீது வெறுப்பைக் காட்டுகிறார்கள். தாயில்லாத குழந்தைகள் என்பதாலும் தனது மற்ற மகன்களும் வெறுக்கும் குழந்தைகள் என்பதாலும் யாகூப் (அலை), யூசுப் மற்றும் புன்யாமீன் மீது அளவு கடந்த அன்பை செலுத்தினார்கள்.

Leave A Comment