எல்லா துறையிலும், எல்லா விஷயங்களுக்காக பாராட்டி விருதுக் கொடுத்துக்கிட்டேதான் இருப்பாங்க. அப்படி கொடுத்து ஊக்கவிச்சாத்தான் அவங்க அங்கீகரிக்கப்படுறாங்கன்னு இன்னும் சிறப்பா செய்ய சொல்லும். நம்மள, நம்ம வேலைய யாருமே கவனிக்கல சம்பளம்பாட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கே உழச்சாத்தானான்னு இருந்துட்டா நிர்வாகம் திடீர்னு முழிச்சி ‘நீ ஒன்னும் கிழிக்கிறா மாதிரி தெரியல உன்ன வேலைய விட்டு தூக்கிறோம்’னு சொல்லுவாங்க. அதுக்கு பயந்துக்கிட்டாவது ஓரளவுக்கு நியாயமா வேலையெல்லாம் முடிச்சிட்டு இல்லன்னா வேலையோட வேலையா வலைப்பதிவு பக்கம் கொஞ்சம் எட்டிப்பார்த்துக்கிட்டு நாமல்லாம் வேலப் பார்க்கிறோம். ஆனா சிலர் இருக்காங்க ரொம்ப நேர்மையா தன்னோட வேலை நேரத்துல சொந்த தேவைக்கு இடம் தரக் கூடாதுன்னு செல்பேசியக் கூட வேலைக்கு எடுத்துப் போக மாட்டாங்க. இப்படியும் இருப்பாங்களான்னு யோசிப்பிங்க, இருக்காங்களே இங்க துபாய் மாநகராட்சியில பணியாற்றும் ஒருத்தர் செல்பேசியக் கூட பணி நேரத்தில உபயோகிக்க மாட்டாராம். வீட்டுக்கு அழைச்சி பேசுறதுக்கு வெள்ளிக்கிழமையில மட்டும் உபயோகிப்பாராம். இவர பத்தி ‘கல்ஃப் நியூஸ்’ல படிக்கும் போது ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. 27 வருஷமா துபாயை அழகாக்க, பராமரிக்க துபாய் நகராட்சியில தோட்டக்காரர உழைச்சிக் கொட்டியிருக்காரு. இந்த 27 வருஷத்துல ஒரு நாள் கூட உடல்நில சரியில்லன்னு விடுப்பெடுத்ததில்லையாம். சின்ன வயசு ஆரோக்கியமான ஆளு அதான்னு நினைக்கிறீங்களா? அதான் இல்ல இவருக்கு 63 வயசு, பெயர் நசீர், பாகிஸ்தானி.
அந்த செய்தியில இவரப் பத்தி மட்டுமல்ல இவர மாதிரி அடிமட்டப் பணியாட்களப் பற்றி பத்தி பத்தியா போட்டிருந்தாங்க.
துபாய்ல ரொம்ப சங்கடமான விஷயமே போக்குவரத்து நெரிசல்தான் அந்த நெரிசலிலும் சந்தோஷமா வண்டி ஓட்டுறேன்னு ஒரு ‘துபாய்
டிரான்ஸ்போர்ட்’ல வேல பார்க்கும் ‘ஏமானி’ அஹமது சாலே (45) சொன்னா அவரும் பாராட்டுக்குரியவர்தானே? அதுவும் வெய்யில் நேரத்துல வெளியில் போகவே யோசிப்போம், இவரு அந்த மாதிரி வெய்யில டாக்ஸிக்காக யாரும் கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிறாரு. நல்ல மனசுக்கு சொந்தக்காரர்.
அப்புறம் இன்னொரு ஒருத்தர் என் மனதை தொட்டவர் -இரு கண்ணுமில்லன்னு துவண்டுப் போய்டாம, தன்னம்பிக்கை மிக்க பெண்ணான நஜீபா அமீரக பல்கலைகழகத்திலேயே பட்டப்படிப்பு முடிச்சவங்க. விஞ்ஞான மூலபொருள ‘ப்ரெய்ல’ மாத்தி படிக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னு
சொல்றாங்க. இவங்க அரசாங்க உத்தியாகத்தில இருக்கிறாங்கன்னா பெருமைக்குரிய விஷயம்தான். அதுவும் ‘நுழைமதி’ தரும் பகுதியில வேலை. இவங்க அங்க என்ன செய்றாங்கன்னா பாஸ்போர்ட் விவரத்தை கணிணில பார்-கோர்ட் மூலமா வருடி சேகரிப்பதுதான் இவங்க பணி.
சரி இவங்கள பத்தியெல்லாம் ஏன் பத்திரிகையில எழுதினாங்கன்னு நீங்க கேட்கலாம், ‘Dubai Government Excellence Programme awards’
நிகழ்ச்சியில துபாய் அரசாங்கம், எந்தெந்த அரசாங்க பிரிவு சிறப்பான சேவை செஞ்சிருக்குன்னு பார்த்து விருது வழங்கினாங்க. அதில இரவு முழுக்க விழிச்சிருந்து மக்களுக்கு பாதுகாப்பு தருகிற துபாய் போலீசுக்கு, துபாய் செய்தி நிறுவனமான ‘எமிரேட்ஸ் நியூஸ்’னு 11 அரசாங்க பிரிவுக்கு விருது கிடச்சது. இதுல ஒவ்வொரு பிரிவில ரொம்ப சிறப்பா வேலை பார்க்கிற அடிமட்ட பணியாளார்கள்னு ‘பல மரத்தக் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டானு’ இல்லாம தன் வேலைய எவ்வளவு சிறப்பா முடியுமோ அவ்வளவு சிறப்பா தன்னையே அர்ப்பணிச்சி தனித்தன்மையோடு வேலை செய்றவங்கள 25 பேரை கண்டுபுடிச்சி The unsung heroesன்னு ஒரு பிரிவுல தேர்ந்தெடுத்து வருடா வருடம் விருது தராங்க. பாடுபடுறவங்கள பத்தி யாரும் பாடுறதில்லன்னு இந்த விருதுக்கு இப்படி பேரு போல. விருது கிடைச்ச ஒவ்வொருத்தரும் சேர்ந்தா மாதிரி சொல்லியிருக்கிற விஷயம் அமீரகத்துடைய பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான உயர்திரு ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்துமுடைய கையால் பரிசு வாங்கி பக்கத்தில் நின்னு படம் எடுப்போம்னு கனவுலக் கூட நெனச்சதில்லன்னு சொல்றாங்க.
பார்த்தீங்கன்னா எல்லோரும் அவங்களுக்காக பாடுபடல தங்கள சார்ந்தவங்கள, குடும்பத்த, பெத்த பிள்ளைகள நல்ல நிலைக்கு கொண்டுவரத்தான் மெழுகுவர்த்தியா உருகுறாங்க. விருதுன்னா சும்மா சான்றிதழ், பாராட்டு மட்டுமல்ல பதவி உயர்வும், திர்ஹம் 50,000 (நம்ம இந்திய ரூபாயில் 6 லட்சம்) பரிசு. அப்படி தன் சேவையைக் கொட்டி வேலைக்குன்னு தன்ன அர்ப்பணச்சிக்கிட்டு தனித்துவம் படைச்ச அந்த சிறப்புக்குரிய 25 பேருல மூணு பேரப்பத்திதான் மேல சொல்லியிருக்கேன். அமாவாசச் சோறு என்றைக்குமா அகப்படும்? எப்பவாவது இப்படி படிக்கும் போது தன்னம்பிக்கை ரொம்ப பொங்கி வரா மாதிரி இருக்கும் அதான் உங்களுக்கும்
பொங்கட்டும்னு எழுதி வச்சேன்.
இந்தச் செய்திய வாசிக்கும் போது நான் இங்க வந்த புதுசுல கேள்விப்பட்ட, அதாவது 10 வருஷத்திற்கு முன்னாடி நடந்த விஷயம் நினைவுக்கு வந்துச்சு. அப்போ உயர்திரு ஷேக் மக்தும் பின் ராஷித் அல் மக்தும் ஆட்சிக் காலத்தில் கண்ணெதிரே சிறப்பான வேலை செஞ்சு பார்த்த ஒரு வயதான தோட்ட வேலையாளுக்கு உடனே சந்தோஷத்துல திர்ஹம் 1 லட்சம் (ரூ. 12 லட்சம்) காசோலை தந்தாராம். ஒரு நாளாச்சாம் இரண்டு நாளாச்சாம் அந்த காசோலை வங்கில மாற்றலையாம். சரி இருக்கட்டும் பார்க்கலாம்னு விட்டார்களாம், ஒரு வாரத்திற்கு மேலாகியும் அந்த காசோலை வங்கிக்கு பணமாக்க வரவில்லையாம், சரி என்ன விஷயம்னு கேட்போம்னு கேட்டா அந்த உழைப்பாளி சொல்லியிருக்காரு “ஐயா அன்பா கையெழுத்துப் போட்டு தந்தத மாத்த மனசில்ல, சட்டம் போட்டு வீட்டு சுவத்துல மாட்டிவச்சிருக்கேன்னு”. அப்புறம் கேள்விப்பட்டவங்க அந்த காசோலைய அப்படியே வச்சிக்கோங்க நாங்க வேறு காசோலை தந்து மாத்தியே தந்திடுறோம்னு பணம் கொடுத்தாங்களாம். இப்படியும் மனுஷங்கள பார்த்திருக்கீங்களா? இது அறியாமையில்ல, பேதைத்தனமில்ல பணம் காசவிட அன்பு பாசத்திற்கு முக்கியதுவம் தந்திருக்காரு, தன் தேவையையும் மறந்து.
‘நானும்தான் என்னையே வேலைக்குன்னு சமர்ப்பிச்சுக்கிட்டேன் ஆனா என்னத்த கண்டேன்’னு சலிச்சிக்காம பொறுத்தார் பூமி ஆள்வார், நீங்க போட்டது கண்டிப்பா முளைக்கும்னு தன்நம்பிக்கையில உழைச்சாலே போதும். நீங்களும் ஒருநாள் பாடப்படுவீங்க.
உண்மையிலேயே அவுங்க சூப்பர் ஸ்டார்தான் :))
Yaar yaaruko super star nu pattam kodukiraanga, aanal unmaiyilaye,neengal kuripitulla pol ullavanga taan unmaiyaana SUPER STAR 😉
ராயல் சல்யூட்
கஷ்டப்பட்டு வேலை செய்யாம இஷ்டப்பட்டு வேலை செஞ்சிருக்காங்க. நல்ல பதிவு. தமிழகத்தின் ஓரே சின்சியர் சிகாமணி செல்வேந்திரன் தான்னு சொல்லிக்கிறாங்களே.. மெய்யாலுமா!
ஹனீபா & ஜி – உண்மையான சூப்பர் ஸ்டார் வெள்ளி திரையில் வராமலேயே ஜொலிப்பார்கள். 😉
நன்றி செல்வேந்திரன். ஆமாமா ஊரு முழுக்க சின்சியர் சிகாமணியப் பத்தித்தான் பேச்சாக்கெடக்குது ;-)ஹனீபா & ஜி – உண்மையான சூப்பர் ஸ்டார் வெள்ளி திரையில் வராமலேயே ஜொலிப்பார்கள். 😉
நன்றி செல்வேந்திரன். ஆமாமா ஊரு முழுக்க சின்சியர் சிகாமணியப் பத்தித்தான் பேச்சாக்கெடக்குது 😉
நானும் அமீரகத்தில் 30 ஆண்டு கஷ்டப்பட்டு வியர்வை சிந்தியிருக்கிறேன். ஒரு பய கண்டுகிடல்லியே.
சின்சியர் க்கும் என(நம?)க்கும் சம்பந்தமில்லாததால இவிங்கள எல்லாம் பரிதாபமாத்தான் பாக்க வேண்டியிருக்கு 🙂
கட்டமைவு,ஒழுங்கு இவை யெல்லாம் அடிமைத்தனந்தானுங்கோவ்..பாராட்டு பரிசு ன்னு 50 பேருக்கு கொடுத்து அதே சாயல்ல 5 லட்சம் அடிமைகள உருவாக்கும் யுக்தி தான் இதெல்லாம்
சூப்பர் ஸ்டார் என்பது கயமைத்தனம்
ஸ்ஸ்ஸ்ஸ் வெயில் அதிகங்க
🙂
//நானும் அமீரகத்தில் 30 ஆண்டு கஷ்டப்பட்டு வியர்வை சிந்தியிருக்கிறேன். ஒரு பய கண்டுகிடல்லியே. // சாபத்தா உங்களுக்கே இது கொஞ்சம் அதிகமா தெரியல 😉
//கட்டமைவு,ஒழுங்கு இவை யெல்லாம் அடிமைத்தனந்தானுங்கோவ்..பாராட்டு பரிசு ன்னு 50 பேருக்கு கொடுத்து அதே சாயல்ல 5 லட்சம் அடிமைகள உருவாக்கும் யுக்தி தான் இதெல்லாம் // நீங்க திருந்திக்கிட மாட்டீங்க. வெயிலுக்கு எலுமிச்சை வையுங்க சரியாகிப் போகும் 😉
நானும் என்னைப்பத்தி தான் எழுதியிருக்கீங்களோன்னு நினைச்சு ஆவலா வாசிக்க வந்தேன். 😉
இவர்களை பற்றி வந்த செய்திகளை கல்ஃப் நியூஸில் வாசித்தறிந்தேன். பதிவிட்டு நீங்களும் உங்களால் முடிந்தளவு அவர்களை சிறப்பித்துவிட்டீர்கள்.
//நானும் என்னைப்பத்தி தான் எழுதியிருக்கீங்களோன்னு நினைச்சு ஆவலா வாசிக்க வந்தேன். ;)// ஒரு வழியா அலுவலகம் புதுப்பிக்கிற வேலையெல்லாம் முடிச்சி வலைப் பக்கம் வந்திட்டாப்புல இருக்கு 😉 உங்கள பத்தியும் ‘கல்ஃப் நீயூஸில்’ வந்திருந்தா உங்களையும் சிறப்பிச்சிருக்கலாம்.
//ஒரு வழியா அலுவலகம் புதுப்பிக்கிற வேலையெல்லாம் முடிச்சி வலைப் பக்கம் வந்திட்டாப்புல இருக்கு 😉 //
அதே அதே! கழுதை கெட்ட குட்டிச்சுவருதானே.
//அதே அதே! கழுதை கெட்ட குட்டிச்சுவருதானே. // அப்ப நீங்க கழுதன்னு ஒத்துக்கிறீங்க 😉
//அப்ப நீங்க கழுதன்னு ஒத்துக்கிறீங்க 😉
//
இந்த ஆட்டத்துக்கு நான் வரல.
நல்ல பதிவு!! வாழ்த்துக்கள்!!
//இந்த ஆட்டத்துக்கு நான் வரல. // எந்த ஆட்டத்துக்கு?
//நல்ல பதிவு!! வாழ்த்துக்கள்!!// நன்றி குட்டிபிசாசு 🙂
ennayyum searthukkunga , enakku epadi tamil font use panrathunnu theriyathu
senthilkumar
coimbatore
(dubai)