ரெக்கை கட்டிப் பறக்குது பாயம்மா பொண்ணோட சைக்கிள்

யுவகிருஷ்ணா ஆல்தோட்டத்தை நினைவுப்படுத்தினாலும் படுத்தினார் மலரும் நினைவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலிருந்து ஒரு சம்பவத்தையாவது பதிவிட நினைத்ததே இது. பீட்டர்ஸ் காலனி குடியிருப்புப் பகுதியில் வளர்ந்த எனக்கு ஆல்தோட்டம் மிகவும் பழக்கப்பட்ட இடம். வண்ண மீன்கள் வாங்குவதற்கும் வாடகை சைக்கிள் எடுப்பதற்கும் அடிக்கடி சென்று வரும் இடம். அப்போதெல்லாம் வாடகை சைக்கிள் ஒருமணி நேரம் எடுப்பதற்கு இரண்டு ரூபாய். இப்போது 'வாடகைக்கு சைக்கிள்' உண்டா என்று தெரியவில்லை. அந்த இரண்டு ரூபாய் சேர்க்க நான்கு முறையாவது [...]

இந்நாளில் உன் நினைவு…

சின்ன வயதிலிருந்தே எனக்கு நட்பு வட்டம் அதிகம். எல்லோரும் நெருங்கி வந்தாலும் ஒரு அடி தள்ளி இருப்பதே என் வழக்கம்.நான் ஆறாங்கிளாஸ் படிக்கும் போது எனக்கு முனீரான்னு ஒரு தோழி. என் மீது ரொம்ப பாசமா, அன்பா என்னை அவள் குழந்தை போல பாவிப்பா. ஆனா அதே அன்பும் அக்கறையும் எனக்கு அவளிடமில்லை. நான் சொல்றதெல்லாம் அவ செய்வாள்..ஆனாலும் அந்த நட்போட ஆழம் அப்போ புரியலை. அவளுக்கு என்ன பொருள் கிடைச்சாலும் அது எனக்குக் கொடுத்திடுவா. நானும் [...]